2025 மே 21, புதன்கிழமை

இங்கிலாந்து எதிர் இந்தியா: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், நொட்டிங்ஹாமில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இந்த டெஸ்டின் நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டமானது மழை காரணமாக இடம்பெறாத நிலையிலேயே போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக, இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 183/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 64, ஜொனி பெயார்ஸ்டோ 29, சாம் கர்ரன் ஆ.இ 27, ஸக் குறொலி 27, டொம் சிப்லி 18 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/46, மொஹமட் ஷமி 3/28, ஷர்துல் தாக்கூர் 2/41, மொஹமட் சிராஜ் 1/48)

இந்தியா: 278/10 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 84, இரவீந்திர ஜடேஜா 56, ரோஹித் ஷர்மா 36, ஜஸ்பிரிட் பும்ரா 28, றிஷப் பண்ட் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/85, ஜேம்ஸ் அன்டர்சன் 4/54)

இங்கிலாந்து: 303/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 109, சாம் கர்ரன் 32, ஜொனி பெயார்ஸ்டோ 30, டொம் சிப்லி 28, டான் லோரன்ஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/64, ஷர்துல் தாக்கூர் 2/37, மொஹமட் சிராஜ் 2/84, மொஹமட் ஷமி 1/72)

இந்தியா: 52/1 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 1/18)

போட்டியின் நாயகன்: ஜோ றூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .