2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கலாம்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவிலிருந்து வெளிவந்ததாக நம்பப்படும் புதிய கொவிட்-19 மாறி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவ அதிகாரிகள் கரிசனையைக் கொண்டிருக்கின்றபோதும், இலங்கைக்காக இங்கிலாந்தின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இங்கிலாந்து அணி இங்கிலாந்திலிருந்து புறப்பட முன்னர் அல்லது இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிக மருத்துவ நடைமுறைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவ அதிகாரிகள் நேற்று பிற்பகலில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மருத்துவ அதிகாரிகளிடம் கதைத்ததாக நம்பப்படுகிறது.

தற்போதைய அட்டவணைப்படி இங்கிலாந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் வாடகைக்கு அமர்த்தபட்ட விமானமொன்றில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இலங்கைக்கு வருவதாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .