2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனலை வென்ற சிற்றி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக றயான் செர்கி, எர்லிங் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கை ஹவேட்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. லிவர்பூல் சார்பாக மொஹமட் சாலா, வேர்ஜில் வான் டிஜிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெட்டோ பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் சிற்றி உள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .