2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனல் – வட்ஃபேர்ட் போட்டி சமநிலை

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையேயான பிறீமியர் லீக் தொடரில், வட்ஃபேர்ட்டின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஆர்சனலுக்கும், வட்ஃபேர்ட்டுக்குமிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப்போட்டியை பிரகாசமாக வட்ஃபேர்ட் ஆரம்பித்த நிலையில் ஆரம்பத்திலே வட்ஃபேர்ட்டின் முன்களவீரர் ஜெராட் டெலுஃபே, மத்தியகளவீரர் டொம் கிளவர்லியின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகளை ஆர்சனலின் கோல் காப்பாளர் பெர்ன்ட் லெனோ தடுத்திருந்தார்.

இந்நிலையில், மைதானத்திலன் மத்தியபகுதியில் பந்தைப் பெற்ற ஆர்சனலின் மத்தியகளவீரர் டனி செபலோஸ், வட்ஃபேர்ட்டின் பெனால்டி பகுதிக்குள்  சென்றிருந்த சக பின்களவீரர் சீட் கொலசினிச்சிடம் வழங்கிய நிலையில், அவரிடமிருந்து பந்தை பெற்ற அவர்களின் சக முன்களவீரரான பியரி எம்ரிக் அபுமெயாங்க் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் கோலாக்க ஆர்சனல் முன்னிலை பெற்றது.

அடுத்த 11ஆவது நிமிடத்தில், ஆர்சனலின் மத்தியகளவீரர் மெசுட் ஏஸிலும், பின்களவீரர் ஐன்ஸ்லி மைட்லன்ட்-நைல்ஸும் பந்தைப் பரிமாறுக் கொண்டு வந்து கொடுத்த பந்தை அபெமெயாங்க் மீண்டும் கோலாக்க தமது முன்னிலையை ஆர்சனல் இரட்டிப்பாக்கியது.

அந்தவகையில், முதற்பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் முன்னிலை வகித்த நிலையில், ஆர்சனலின் பின்களவீரர் சோக்ரடீஸ் பஸ்தபோலஸ் விட்ட தவறொன்றையடுத்து டொம் கிளவர்லி கோலொன்றைப் பெற்ற நிலையில் ஆர்சனலின் முன்னிலை ஒரு கோலாகக் குறைந்தது.

இதைத் தொடர்ந்து மாற்றுவீரராகக் களமிறங்கிய வட்ஃபேர்ட்டின் மத்தியகளவீரரான றொபேர்ட்டோ பெரைரா, போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்கள் இருக்கையில் ஆர்சனலின் பின்களவீரர் டேவிட் லூயிஸால் வீழ்த்தப்பட்டிருந்த நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை அவர் கோலாக்கியதோடு இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .