2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: எவெர்ற்றனை வென்றது யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 08 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ் இரண்டு கோல்களையும், எடின்சன் கவானி ஒரு கோலையும் பெற்றார். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பேர்ணார்ட் பெற்றிருந்தார்.

இதேவேளை, செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற ஷெஃபீல்ட் யுனைட்டெட்டுடனான போட்டியில் அவ்வணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம், பென் சில்வெல், தியாகோ சில்வா, திமோ வேர்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஷெஃபீல்ட் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிட் மக்கொல்ட்ரிக் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X