2025 ஜூலை 05, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சியை வீழ்த்தியது யுனைட்டெட்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் செல்சியை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது.

இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டை செல்சியின் பின்களவீரரான கேர்ட் ஸூமா வீழ்த்திய நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கோலாக்கிய நிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் முதற்பாதியில் வேறெந்த கோலும் பெறப்படாத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் முதற்பாதியில் முன்னிலை வகித்த மன்செஸ்டர் யுனைட்டெட், தமது பின்களவீரர் ஹரி மக்குவாயா ஆரம்பித்த அதிரடி நகர்வொன்றை அணியின் மத்தியகளவீரரான அன்ட்ரையாஸ் பெரைரா வழங்கிய பந்தை முன்களவீரரான அன்டோனி மார்ஷியல் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கோலாக்கிய நிலையில் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது.

இதையடுத்த இரண்டாவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் போல் பொக்பா மேலால் வழங்கிய பந்தை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கோலாக்கிய நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், போட்டியின் 81ஆவது நிமிடத்தில் போல் பொக்பா, மாற்றுவீரராகக் களமிறங்கிய தமதணியின் முன்களவீரரான டேனியல் ஜேம்ஸிடம் வழங்கிய பந்தை அவர் கோலாக்கிய நிலையில் இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

இதேவேளை, நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் தமது முன்களவீரர் பியரி எம்ரிக் அபுமெயாங்க் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .