Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியான்ட்ரோ ட்ரொஸார்ட் பெற்றிருந்தார். வில்லா சார்பாக மற்றி காஷ், எமி ப்யென்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக ஹியூகோ எகிடிகே இரண்டு கோல்களையும், டொமினிக் ஸபொஸ்லாய் ஒரு கோலைப் பெற்றனர். லீட்ஸ் சார்பாக டொமினிக் கல்வேர்ட்-லூயின், அன்டன் ஸ்டாஷ், ஓ தனக ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை போர்ண்மெத்தின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் செல்சிக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோ கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago