2025 மே 08, வியாழக்கிழமை

இங்கிலாந்து முகாமையாளர் செளத்கேட் இராஜினாமா

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து கரெத் செளத்கேட் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கால்பந்தாட்டச் சங்கம் செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெய்னிடம் இங்கிலாந்து தோற்ற நிலையிலேயே இவ்வறிப்பு வெளிவந்துள்ளது.

செளத்கேட்டின் ஒப்பந்தமானது இவ்வாண்டு டிசெம்பர் மாதம் முடிவடையவிருந்தபோதும் அவரை 2026ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத் தொடர் வரையில் சங்கம் விரும்பியிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

எட்டாண்டுகளாக இங்கிலாந்தின் முகாமையாளராக இருந்த செளத்கேட் 102 போட்டிகளுக்கு பொறுப்பாக இருந்து 2016ஆம் ஆண்டிலிருந்து 2018 உலகக் கிண்ண அரையிறுதி, 2020 யூரோ இறுதிப் போட்டி, 2022 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X