Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜொனி பேர்ஸ்டோ (ஹைதராபாத் சன்ரைசர்ஸ்), 20க்கு இருபது கிரிக்கெட்டின் முதல்நிலை துடுப்பாட்ட வீரர் டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் சொந்த காரணங்களுக்காக எதிர்வரும் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கும் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சிய ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமீரகத்தில் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை திடீரென கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்பது அவர்களை பாதித்து இருப்பதாக கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட நிர்வாகியொருவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இத்தகைய தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தாலும் தற்போது இந்திய அணியின் பயிற்சி குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் சபை தனது முடிவை மாற்றியுள்ளது.
ஏற்கெனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் ஒதுங்கிய நிலையில், மேலும் 3 முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து பின்வாங்கி இருப்பது சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பஞ்சாப் அணி டேவிட் மலானுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ராமை ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேவேளை, மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கரன், டொம் கரன், ஜார்ஜ் கார்டன், ஒய்ன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷித், லிவிங்ஸ்டன், ஜேசன் ரோய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025