Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்ற நிலையில், ஓவலில் வியாழக்கிழமை (31) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, குஸ் அட்கின்ஸன் (5), கிறிஸ் வோக்ஸ், ஜொஷ் டொங்கிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களையே தமது முதலாவது இனிங்ஸில் பெற்றது. கருண் நாயர் 57, சாய் சுதர்ஷன் 38, வொஷிங்டன் சுந்தர் 26 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஸக் குறோலியின் 64, ஹரி ப்றூக்கின் 53, பென் டக்கெட்டின் 43, ஜோ றூட்டின் 29, ஒலி போப்பின் 22 ஓட்டங்களுடன், ஆகாஷ் டீப், பிரசீத் கிருஷ்ணா (4), மொஹமட் சிராஜ்ஜிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, யஷஸ்வி ஜைஸ்வாலின் 118, டீப்பின் 66, இரவீந்திர ஜடேஜாவின் 53, சுந்தரின் 53, துருவ் ஜுரேலின் 34 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டொங்க் 5, அட்கின்ஸன் 3, ஜேமி ஒவெர்ட்டன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அந்தவகையில் 374 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் டக்கெட் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை மொஹமட் சிராஜ் கைப்பற்றியிருந்தார்.
12 minute ago
45 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
45 minute ago
46 minute ago