2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்தை மீண்டும் வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், அடிலெய்ட்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இப்பகலிரவுப் போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று 275 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜொஸ் பட்லர் 26, கிறிஸ் வோக்ஸ் 44 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜஹை றிச்சர்ட்ஸன் 5, மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன் ஆகியோர் தலா 2, மிஷெல் நேஸர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக மர்னுஸ் லபுஷைன் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 473/9 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 103, டேவிட் வோணர் 95, ஸ்டீவ் ஸ்மித் 93, அலெக்ஸ் காரி 51, மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 39, மிஷெல் நேஸர் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/113, ஜேம்ஸ் அன்டர்சன் 2/58, ஒலி றொபின்ஸன் 1/45, ஜோ றூட் 1/72, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/73, கிறிஸ் வோக்ஸ் 1/103)

இங்கிலாந்து: 236/10 (துடுப்பாட்டம்: டேவிட் மலான் 80, ஜோ றூட் 62, பென் ஸ்டோக்ஸ் 34, கிறிஸ் வோக்ஸ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/37, நேதன் லையன் 3/58, கமரொன் கிறீன் 2/24, மிஷெல் நேஸர் 1/33)

அவுஸ்திரேலியா: 230/9 (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 51, மர்னுஸ் லபுஷைன் 51, கமரொன் கிறீன் ஆ.இ 33, மார்க்கஸ் ஹரிஸ் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோ றூட் 2/27, டேவிட் மலான் 2/33, ஒலி றொபின்ஸன் 2/54, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/27, ஜேம்ஸ் அன்டர்சன் 1/8)

இங்கிலாந்து: 192/10 (துடுப்பாட்டம்: கிறிஸ் வோக்ஸ் 44, றோறி பேர்ண்ஸ் 34, ஜொஸ் பட்லர் 26, ஜோ றூட் 24, டேவிட் மலான் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஹை றிச்சர்ட்ஸன் 5/42, மிற்செல் ஸ்டார்க் 2/43, நேதன் லையன் 2/55, மிஷெல் நேஸர் 1/28)

போட்டியின் நாயகன்: மர்னுஸ் லபுஷைன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .