Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றதோடு, மூன்றாவதில் இங்கிலாந்து வென்ற நிலையில், நான்காவதில் வென்று தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஐந்தாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 135 (54), ஷிவம் டுகேயின் 30 (13), திலக் வர்மாவின் 24 (15), சஞ்சு சாம்ஸனின் 16 (07), அக்ஸர் பட்டேலின் 15 (11) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பிறைடன் கார்ஸ் 4-0-38-3, மார்க் வூட் 4-0-32-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 248 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மொஹமட் ஷமி (3), வருண் சக்கரவர்த்தி (2), ரவி பிஷ்னோய், ஷிவம் டுபே (2), அபிஷேக் ஷர்மாவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 10.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று 150 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பில் ஸோல்ட் 55 (23) ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக அபிஷேக் ஷர்மாவும், தொடரின் நாயகனாக வருண் சக்கரவர்த்தியும் தெரிவாகினர்.
தொடரை 4-1 என்ற ரீதியில் இந்தியா கைப்பற்றியது.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago