2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இங்கிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், அன்டிகுவாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜொஸ் பட்லர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பில் ஸோல்டின் 45 (28), வில் ஜக்ஸின் 26 (24), ஸக் குறோலியின் 48 (63), ஹரி ப்ரூக்கின் 71 (72), சாம் கர்ரன் 38 (26), பிறைடன் கார்ஸின் ஆட்டமிழக்காத 31 (21) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், குடகேஷ் மோட்டி, ஒஷேன் தோமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 326 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஷே ஹோப்பின் ஆட்டமிழக்காத 109 (83), றொமாரியோ ஷெப்பர்ட்டின் 48 (28), அலிக் அதனாஸேயின் 66 (65), பிரண்டன் கிங்கின் 35 (44), ஷிம்ரோன் ஹெட்மயரின் 32 (30) ஓட்டங்களோடு 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், றெஹான் அஹ்மட், குஸ் அட்கின்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக ஹோப் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .