Shanmugan Murugavel / 2025 ஜூலை 07 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டை இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில், பேர்மிங்ஹாமில் புதன்கிழமை (02) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (06) முடிவுக்கு வந்த ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து, ஆகாஷ் டீப் (4), வொஷிங்டன் சுந்தர், பிரசீத் கிருஷ்ணா, இரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களையே பெற்று 336 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜேமி ஸ்மித் 88, பிறைடன் கார்ஸ் 38, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் தெரிவானார்.
28 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
2 hours ago