2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இங்கிலாந்தைத் தோற்கடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் தொடரில், லோர்ட்ஸில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த குறித்த போட்டியில் 151 ஓட்டங்களால் இந்தியா வென்றது.

நேற்று முன்தின ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இந்தியா,  ஆரம்பத்திலேயே றிஷப் பண்ட், இஷாந்த் ஷர்மாவை ஒலி றொபின்ஸனிடம் இழந்தது.

எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த மொஹமட் ஷமியின் ஆட்டமிழக்காத 56, ஜஸ்பிரிட் பும்ராவின் ஆட்டமிழக்காத 34 ஓட்டங்களோடு, தமது இரண்டாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே றோறி பேர்ண்ஸ், டொம் சிப்லியை முறையே பும்ரா, ஷமியிடம் இழந்தது. இதையடுயடுத்து இணைந்த ஹசீம் ஹமீட், அணித்தலைவர் ஜோ றூட் ஆகியோர் ஓரளவுக்குத் தடுப்பை வழங்கியபோதும், ஹமீட் இஷாந்த் ஷர்மாவிடம் வீழ்ந்தார்.

பின்னர் வந்த ஜொனி பெயார்ஸ்டோவும் ஷர்மாவிடம் விழ, உடனேயே றூட்டும் பும்ராவிடம் வீழ்ந்தார். இதையடுத்து சேர்ந்த ஜொஸ் பட்லரும், மொயின் அலியும் சிறிது நேரம் தடுத்தாடியபோதும், அலி, சாம் கர்ரன் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் மொஹமட் சிராஜ்ஜிடம் வீழ்ந்தனர்.

இதையடுத்து பட்லருடன் இணைந்த றொபின்ஸன் நிதானமாக இருந்தபோதும் குறிப்பிட்ட நேரத்தில் பும்ராவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து பட்லர், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் அடுத்துதடுத்து சிராஜ்ஜிடம் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களையே பெற்ற இங்கிலாந்து தோல்விய்டடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக லோகேஷ் ராகுல் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 364/10 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 129, ரோஹித் ஷர்மா 83, விராட் கோலி 42, இரவீந்திர ஜடேஜா 40, றிஷப் பண்ட் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 5/62, ஒலி றொபின்ஸன் 2/73, மார்க் வூட் 2/91, மொயின் அலி 1/53)

இங்கிலாந்து: 391/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 180, ஜொனி பெயார்ஸ்டோ 57, றோறி பேர்ண்ஸ் 49, மொயின் அலி 27, ஜொஸ் பட்லர் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/94, இஷாந்த் ஷர்மா 3/69, மொஹமட் ஷமி 2/95)

இந்தியா: 298/8 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 61, மொஹமட் ஷமி ஆ.இ 56, செட்டேஸ்வர் புஜாரா 45, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 34, றிஷப் பண்ட் 22, ரோஹித் ஷர்மா 21, விராத் கோலி 20, இஷாந்த் ஷர்மா 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 3/51, ஒலி றொபின்ஸன் 2/45, மொயின் அலி 2/84, சாம் கர்ரன் 1/42)

இங்கிலாந்து: 120/10 (துடுப்பாட்டம் ஜோ றூட் 33, ஜொஸ் பட்லர் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/32, ஜஸ்பிரிட் பும்ரா 3/33, இஷாந்த் ஷர்மா 2/13, மொஹமட் ஷமி 1/13

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X