2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

இத்தாலிய சீரி ஏ தொடர்: சமநிலையில் ஜுவென்டஸ் – றோமா போட்டி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 02 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், றோமாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.

இதேவேளை சஸுலோவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா தோற்றது.

இந்நிலையில் டொரினோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும் 53 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலியும் 51 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .