2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இத்தாலிய சீரி ஏ: சமநிலையில் ஜுவென்டஸ் – லேஸியோ போட்டி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் முடித்துக் கொண்டது.

ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதுடன், லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை பிலிப்பே கைசெடோ பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஏ.சி மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வெரோனாவுக்கும், அவ்வணிக்குமிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. ஏ.சி மிலன் சார்பாக, ஜியன்ஜியாகொமோ மக்னனி, ஸல்டான் இப்ராஹிமோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வெரோனா சார்பாக அன்டொனின் பரக் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .