2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

இத்தாலிய சீரி ஏ: லேஸியோவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது.

இதேவேளை தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியது.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 78 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும் 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 60 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸ் உள்ளது. இதில் ஏ.சி மிலனும் ஜுவென்டஸும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .