Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்தியக் குழாம் அறிவிக்கபட்டுள்ளது.
இதில், கடந்த நான்கு மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாத ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங்கை, ஜடேஜா பிரதீயீடு செய்கிறார்.
இந்தியாவின் உள்ளூர் முதற்தர போட்டித் தொடரான ரஞ்சிக் கோப்பை தொடரின் மூன்று சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் பங்குபற்றி 8.25 என்ற ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் 24 விக்கெட்களை கைப்பற்றியிருந்ததோடு, சௌராஷ்ரா அணிக்கெதிரான போட்டியில் 91,58 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நடத்தை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் ஒரு டெஸ்ட் போட்டித் தடை விதிக்கப்பட்ட இஷாந் ஷர்மா, முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்கமுடியாத போதும் குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
தவிர, இறுதி இரு ஒருநாள் சர்வதேசப்போட்டிக்கான குழாமில் உமேஷ் யாதவ்வுக்கு பதிலாக ஸ்ரீநாத் அரவிந் இடம்பெற்றுள்ளார். தவிர, முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் காயமடைந்த அஷ்வின் டெஸ்ட் குழாமில் இடம்பெற்ற போதும் இறுதி இரு ஒருநாள் சர்வதேசப்போட்டிக்கான குழாமில் இடம்பெறவில்லை.
டெஸ்ட் குழாம்-விராத் கோலி (தலைவர்), முரளி விஜய், ஷீகர் தவான், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ரோஹித் ஷர்மா, ரிதிமான் சகா, ரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .