Shanmugan Murugavel / 2026 ஜனவரி 13 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ராஜ்கோட்டில் புதன்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து, தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
அந்தவகையில் வில் யங்க், கிளென் பிலிப்ஸிடமிருந்து குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை நியூசிலாந்து எதிர்பார்ப்பதுடன், மறுபக்கமாக பந்துவீச்சாளர்களிடமிருந்து மேலதிக கட்டுக்கோப்பை எதிர்பார்க்கிறது.
மறுபக்கமாக இந்திய அணியின் வொஷிங்டன் சுந்தர் காயமடைந்த நிலையில் அவரை குழாமில் புதுமுகவீரர் ஆயுஷ் படோனி பிரதியிட்ட நிலையில் அவர் நேரடியாக அணியில் உள்ளே வரக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதோடு, இல்லாவிடின் நிதிஷ் குமார் ரெட்டி அல்லது அர்ஷ்டீப் சிங் பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago