2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்தியன் பிறீமியர் லீக்கில் வீரர்களைத் தக்க வைப்பதில் முரண்பாடு

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் அடுத்த வீரர் ஏலம் நடைபெற இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவான காலப்பகுதியே இருக்கின்ற நிலையில், குழாமில் எத்தனை வீரர்களைத் தக்க வைப்பதென்று அணிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படவில்லை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் அணி உரிமையாளர்களுக்குமிடையே, மும்பையில் நேற்று  இடம்பெற்ற முக்கியமான சந்திப்பில், ஐந்து வீரர்களவுக்கு தக்க வைப்பது அல்லது ஒருவரையும் தக்க வைப்பதில்லை என்பதில் அணி உரிமையாளர்கள் பிளவுபட்டிருந்தனர்.

எவ்வாறெனினும், ஏலத்தின்போது, தாம் வைத்திருந்த வீரரொருவரை, ஏலத்தின் அதியுயர் கேள்விக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவதற்கு பல அணி உரிமையாளர்கள் விரும்பியிருந்தனர்.

இதேவேளை, அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்தில் ஏலத்தை நடத்துவதென மேற்கூறப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில், கொல்கத்த நைட் றைடர்ஸ் அணியின் உரிமையாளர்களான ஷாருக்கான், ஜே மேத்தா, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, கிங்ஸ் லெவிண் பஞ்சாப்பின் உரிமையாளர்களான நெஸ் வாடியா, மொஹிட் புர்மன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் படலே உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியன் பிறீமியன் லீக்கின் நிர்வாக சபை மூன்று வீரர்களைத் தக்க வைப்பதையே விரும்புகின்ற நிலையில், இந்தியன் பிறீமியர் லீக்கின் இரண்டு செல்வந்த அணிகளான மும்பை இந்தியன்ஸும் சென்னை சுப்பர் கிங்ஸும் முறையே ஐந்து, நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றன.

இதேவேளை, கொல்கத்தா நைட் றைடர்ஸும் கிங்ஸ் லெவிண் பஞ்சாப்பும் ராஜஸ்தான் ரோயல்ஸும் எந்த வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்நிலையில், ஹைதரபாத் சண்றைஸர்ஸும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரும் மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் திருப்தியடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X