2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா எதிர் இங்கிலாந்து: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நொட்டிங்ஹாமில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தை வீழ்த்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது.

மாயங்க் அகர்வாலுக்கு தலையில் பந்து தாக்கிய நிலையில், அவருக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக லோகேஷ் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, அஜின்கியா ரஹானேயும் முழு உடற்றகுதியை அடைந்த நிலையில் அவரும் களமிறங்குவதோடு, செட்டேஸ்வர் புஜாராவுக்கு ஓட்டங்களைப் பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக இது கருதப்படுகிறது.

இதுதவிர, இரவிச்சந்திரன் அஷ்வின் மாத்திரமே சுழற்பந்துவீச்சாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, மொஹமட் சிராஜ்ஜும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .