2025 மே 16, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு 78 ஓட்டங்கள் தேவை

Mithuna   / 2024 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரைச் சமப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு 78 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே இழந்துள்ள இந்தியா, கேப் டெளணில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் 55 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்காவை சுருட்டியது.

தொடர்ந்து தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. இதில், விராட் கோலி 46, றோஹித் ஷர்மா 39, ஷுப்மன் கில் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ககிஸோ றபாடா, நன்ட்ரே பேர்கர், லுங்கி என்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஜஸ்பிரிட் பும்ரா (6), முகேஷ் குமார் (2), மொஹமட் சிராஜ், பிரசீத் கிருஷ்ணாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஏய்டன் மார்க்ரம் 106 ஓட்டங்களைப் பெற்றார்.

அந்தவகையிலேயே இப்போட்டியை வென்று தொடரைச் சமப்படுத்துவதற்கு 78 ஓட்டங்களை இந்தியா பெற வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .