Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 13 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேஷியாவில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், நடப்பு ஆசிய கிண்ண சம்பியன்களான இந்தியாவை நேபாளம் வென்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம், 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் திபேந்திர சிங் 88 (101), ஜிதேந்திர சிங் தகுரி 36 (95) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அபிஷேக் ஷர்மா, ஆதித்யா தகரே ஆகியோர் தலா 2 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலலுக்கு, 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஹிமன்ஷு ராணா 46 (38), மனோஜ் கல்ரா 35 (69), அபிஷேக் ஷர்மா 27 (42) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், திபேந்திர சிங் 4, பவான் சராப், ஷஹப் அலம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
41 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
20 Jul 2025