Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஏப்ரல் 02 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரைச் சேர்ந்த டேக்வாண்டோ வீராங்கனையான அஃப்ரீன் ஹைதர் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
காஷ்மீரில் பலர் பல்வேறு வகையான தற்காப்புக் கலைகளைப் பயிற்சி செய்கின்ற போதும் பாரம்பரிய கலையான டேக்வாண்டோவை அஃப்ரீன் ஹைதர் பயிற்சி செய்தார்.
உலக டேக்வாண்டோ கழகம் நடத்தும் உலகெங்கிலும் உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
உயரடுக்கு வகுப்பு டேக்வாண்டோ வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் பல்வேறு ஜீ2 மட்ட போட்டிகளில் அஃப்ரீன் பங்கேற்கிறார்.
டேக்வாண்டோ விளையாட்டில் முதலிடம் பெற வேண்டும் என்ற தனது லட்சியத்துடன் அஃப்ரீன், சமீபத்தில் ஈரானின் தெஹரானில் நடைபெற்ற ஜீ2 மட்ட மூன்று டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்றார்.
2022 எப்ஜேஆர் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறிய அவர், போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு, மூன்றாவது சுற்றுக்குப் பின்னர் 7-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் இருந்ததால், தங்கச் சுற்றுக்கான போட்டியை இழந்தார்.
சர்வதேச போட்டிகள் தவிர, அஃப்ரீன் தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் ஏராளமான பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago