2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று பாதியில் நிறுத்தப்பட்டது.

விதிப்படி, போட்டி இன்று விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்று நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

இன்றைய தினம், நியூசிலாந்து அணி மீதமுள்ள 23 பந்துகளை சந்தித்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்தது. 

அதைத் தொடர்ந்து 240 என்ற வெற்றி இலக்கினை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருவதுடன், இன்று மழை வர வாய்ப்பில்லை என கூறப்படுவதால், போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .