Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் துடுப்பாட்டவீரர் மர்னுஸ் லபுஷைன் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் மர்னுஸ் லபுஷைன் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொஷ் ஹேசில்வூட், ஷோன் அபொட் மற்றும் துடுப்பாட்டவீரர் அஸ்தன் டேணர், சுழற்பந்துவீச்சாளர் அஸ்தன் அகர் ஆகியோரும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறைவீரர்கள் கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், துடுப்பாட்டவீரர்கள் உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), ஷோன் அபொட், அஸ்தன் அகர், அலெக்ஸ் காரி (உப அணித்தலைவர்), பற் கமின்ஸ் (உப அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், ஜொஷ் ஹேசில்வூட், மர்னுஸ் லபுஷைன், கேன் றிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், அஸ்தன் டேணர், டேவிட் வோணர், அடம் ஸாம்பா.
இந்நிலையில், காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டின் பிரதியீடாக அவுஸ்திரேலியக் குழாமுக்கு பீற்றர் சிடில் மீள அழைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago
4 hours ago