2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரில் ஸ்டார்க் இல்லை

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடர்களுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை.

காயம் காரணமாகவே ஸ்டார்க் குழாமில் இடம்பெறாத நிலையில், அவுஸ்திரேலிய இறுதியாகப் பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறைவீரர் மிற்செல் மார்ஷ், வேகப்பந்துவீச்சாளர்கள் பீற்றர் சிடில், பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தற்போதைய குழாமில் இடம்பெறவில்லை.

இதேவேளை, சிரேஷ்ட துடுப்பாட்டவீரரான ஷோண் மார்ஷ், தனது இரண்டாவது பிள்ளை பிறந்த பின்னரே குழாமில் இணைந்து கொள்ளவுள்ளார். அந்தவகையில், துடுப்பாட்ட வீரர் டார்சி ஷோர்ட், சகலதுறைவீரர் அஸ்தன் தேணர், வேகப்பந்துவீச்சாளர்கள் நேதன் கூல்டர்நைல், கேன் றிச்சர்ட்சன் ஆகியோர் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ், விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் காரேயுடன் சேர்ந்து இணை உபதலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), உஸ்மான் கவாஜா, ஷோண் மார்ஷ், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், கிளென் மக்ஸ்வெல், அஸ்தன் தேணர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் காரே, பற் கமின்ஸ், நேதன் கூல்ல்டர்நைல், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், ஜேசன் பெஹெரோவ், நேதன் லையன், அடம் ஸாம்பா, டார்சி ஷோர்ட்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .