2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, மும்பையில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இந்திய அணியில் காயம் காரணமாக அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும், ஓய்வால் லோகேஷ் ராகுல், விராட் கோலி இல்லாத நிலையில், ராகுல் ட்ரிபாதி, ருத்துராஜ் கைகவாட், இஷன் கிஷன், ஷுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

இதேவேளை, ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ் இல்லாத நிலையில், முகேஷ் குமார், ஷிவம் மவி உள்ளிட்டோரை அணி நிர்வாகம் சோதிக்கும் எனத் தெரிகிறது.

மறுபக்கமாக அணித்தலைவர் தசுன் ஷானக, வனிடு ஹஸரங்க போன்றோருடன் லங்கா பிறீமியர் லீக்கில் பெறுபேறுகளை வெளிப்படுத்திய அவிஷ்க பெர்ணாண்டோ, சதீர சமரவிக்கிரம, அஷேன் பண்டாரவுடன் பலமாகவே இலங்கை காட்சியளிக்கிறது.

பானுக ராஜபக்‌ஷ போன்றோர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதற்கு தொடர்ந்து ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .