2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்கேலகவில் சனிக்கிழமை (26) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இருபதுக்கு – 20 சம்பியன்களான இந்தியாவானது இலங்கை மற்றும் இந்தியாவில் இரண்டாண்டுகளில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணத் தொடரை குறிவைத்து புதிய அணித்தலைவர், பயிற்சியாளருடன் களமிறங்கியுள்ள நிலையில், மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்திய இலங்கையும் புதிய அணித்தலைவருடன் கொஞ்சம் மாறுபட்ட அணியுடன் களமிறங்குகின்றது.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இலங்கைக் குழாமில் பெயரிடப்பட்டிருந்த துஷ்மந்த சமீர, நுவான் துஷார உபாதைக்குள்ளாகிய நிலையில் அவர்கள் அசித பெர்ணாண்டோ, டில்ஷான் மதுஷங்க மூலம் பிரதியிடப்பட்டுள்ளனர்.

இலங்கைக் குழாமில் தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் பெரேரா ஆகியோர் மீள்வருகை புரிந்துள்ள நிலையில் இவர்களுடன் புதுமுகவீரர் சமிந்து விக்ரமசிங்க மற்றும் குசல் மென்டிஸ் அவதானிக்கப்படுகின்றனர்.

மறுபக்கமாக இந்தியாவைப் பொறுத்த வரையில் றோஹித் ஷர்மா, விராட் கோலி, இரவீந்திர ஜடேஜாவின் ஓய்வு அவர்களைப் பெரியளவில் பாதிக்கா விட்டாலும் சூரியகுமார் யாதவ்வின் அணித்தலைமையானது நிச்சயமாக கவனிக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .