2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா சிம்பாப்வே?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரானது, ஹராரேயில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 12.45 நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

பங்களாதேஷுடனான தொடரை வென்ற உற்சாகத்துடன் இருக்கும் சிம்பாப்வே இந்தியாவை வெல்வதற்கு மிகவும் மேம்பட்ட தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.

நட்சத்திர துடுப்பாட்டவீரர் சிகண்டர் ராசா, சகலதுறைவீரர் வெஸ்லி மட்ஹெவெரே, அணித்தலைவர் றெஜிஸ் சகப்வா உள்ளிட்டோர் நீண்ட இனிங்ஸ்கள் ஆடுமிடத்தே இந்தியாவுக்கு சவாலையளிக்க முடியும்.

மறுபக்கமாக, நீண்டகால காயங்களிலிருந்து திரும்பிய லோகேஷ் ராகுல், தீபக் சஹர் ஆகியோருக்கு அணியில் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

இதுதவிர, சஞ்சு சாம்ஸன், ஷுப்மன் கில், ராகுல் ட்ரிபாதி, ருத்துராஜ் கைகவாட், இஷன் கிஷன், ஷபாஸ் அஹ்மட் போன்றோரும் குழாம்களில் தமதிடங்களை தொடருவதற்கு தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X