2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, தரம்சாலாவில் இலங்கை நேரப்படி இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரில் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்தாவாறு தென்னாபிரிக்காவும், நான்காமிடத்தில் இருந்தாவாறு இந்தியாவும் விளையாடவுள்ளன.

அந்தவகையில், இத்தொடரில் 3-0 என இந்தியாவை வெள்ளையடிக்கும் பட்சத்தில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை தென்னாபிரிக்கா அடைய முடிவதுடன், நான்காமிடத்திலிருக்கும் இந்தியா ஓரிடம் கீழிறங்கி ஐந்தாமிடத்தை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இத்தொடரை 2-1 என தென்னாபிரிக்கா வெல்லும் பட்சத்தில் அவ்வணி தனது மூன்றாமிடத்தில் தொடருமிடத்து, ஐந்தாமிடத்துக்கு இந்தியா களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்தொடரை 2-1 எனவோ அல்லது 3-0 என வெள்ளையடித்தோ இந்தியா கைப்பற்றும் சமயத்தில், நான்காமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு இந்தியா முன்னேறும் என்பதோடு, மூன்றாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்கா ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் பப் டு பிளெஸி, ஜெ.பி டுமினி, சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், இளம் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி, சகலதுறைவீரர் கிறிஸ் மொறிஸ் ஆகியோர் குழாமில் இல்லாததோடு முன்னாள் அணித்தலைவர்கள் ஹஷிம் அம்லா ஓய்வு பெற்றுள்ள நிலையில் இத்தொடரில் பிரகாசிப்பதற்கு பிரதானமாக புதிய அணித்தலைவர் குயின்டன் டி கொக், டேவிட் மில்லர், றஸி வான் டர் டுஸன், இளம் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபடாவிலேயே தென்னாபிரிக்கா தங்கியிருக்க வேண்டியுள்ளது.

மறுபக்கமாக ரோஹித் ஷர்மா, அணித்தலைவர் விராத் கோலி, றிஷப் பண்ட் என முழுப்பலத்துடன் இந்தியா களமிறங்குகையில், அண்மைய போட்டிகளில் பெரிதாகப் பிரகாசித்திருக்காத ஷீகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோரிடமிருந்து சிறப்பான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏனெனில், குழாமுக்குள்ளேயே அண்மைய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பகப் பிரகாசித்த ஷ்ரேயாஸ் ஐயர் காணப்படுகின்றனர்.

இத்தொடரில் புவ்னேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் கலீல் அஹ்மட், நவ்தீப் சைனி ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு தனித்து செயற்படுகின்றார்கள் என்று பரிசோதிப்பதற்கான பொன்னான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .