2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது கட்டாக்கில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரானது இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு தம்மை தயார்படுத்த இரண்டு அணிகளுக்கும் உதவுகிறது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா அணிக்குத் திரும்புகையில் பலத்தை அளிக்கிறது. எவ்வாறு இருந்தபோதும் அணிக்கு வெளியே யஷஸ்வி ஜைஸ்வால், லோகேஷ் ராகுல், ரிங்கு சிங் எனப் பல வீரர்கள் இருக்கின்ற நிலையில் அணித்தலைவர் சூரியகுமார் யாதவ், உப அணித்தலைவர் ஷுப்மன் கில், திலக் வர்மாவிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர இறுதி ஓவர்களில் ஓட்டக் குவிப்புக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ள வொஷிங்டன் சுந்தரின் பெறுபேறுகளும் அவதானிக்கப்படும்.

மறுபக்கமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இனிங்ஸைக் கட்டமைப்பில் சிக்கல்களை தென்னாபிரிக்கா எதிர்நோக்கியிருந்தபோதும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் டேவிட் மில்லர், டெவால்ட் பிறெவிஸ், குயின்டன் டி கொக், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆபத்தானவர்களாகக் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X