2026 ஜனவரி 21, புதன்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 20 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது புதன்கிழமை (20) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது இரண்டு அணிகளுக்கும் சிறந்த பயிற்சியாக அமையவுள்ளது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியாவின் திலக் வர்மா இல்லாத நிலையில், அவரை ஷ்ரேயாஸ் ஐயர் குழாமில் பிரதியிட்டபோதும் அணியில் உலகக் கிண்ணக் குழாமில் இடம்பெற்றுள்ள இஷன் கிஷன் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று காயமடைந்துள்ள வொஷிங்டன் சுந்தரை குழாமில் ரவி பிஷ்னோய் பிரதியிட்டபோதும் அணியில் அவரை ரிங்கு சிங் பிரதியிடுவாரெனத் தெரிகிறது.

நீண்ட காலமாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறிவரும் இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ணத்துக்கு முன்னர் தன்மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டியுள்ளார்.

மறுபக்கமாக நியூசிலாந்தின் மிஷெல் பிறேஸ்வெல் உபாதை காரணமாக இத்தொடரில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளபோதும், அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், றஷின் றவீந்திர, மற் ஹென்றி, மார்க் சப்மனின் வருகை பலத்தை வழங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X