2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா பங்களாதேஷ்

Editorial   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில் இஷன் கிஷன், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்ஜுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, மொஹமட் ஷமி, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றனர்.

மறுபக்கமாக தொடரிலிருந்து ஏற்கெனவே பங்களாதேஷ் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அவ்வணி அழுத்தமின்றி விளையாடலாம். பங்களாதேஷுக்கு குழந்தை பிறப்புக்காக சென்ற முஷ்பிக்கூர் ரஹீமின் விடுப்பு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அஃபிஃப் ஹொஸைன் பிரதியிடுவதுடன், மொஹமட் நைமை தன்ஸிட் ஹஸன் பிரதியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X