2025 மே 16, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வென்ற அவுஸ்திரேலியா

Mithuna   / 2023 நவம்பர் 29 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கெளகாத்தியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மத்தியூ வேட், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ருத்துராஜ் கைகவாட்டின் ஆட்டமிழக்காத 123 (57), சூரியகுமார் யாதவ்வின் 39 (29), திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 31 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 4-1-12-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 223 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கிளென் மக்ஸ்வெல்லின் ஆட்டமிழக்காத 104 (48), ட்ரெவிஸ் ஹெட்டின் 35 (18), வேட்டின் ஆட்டமிழக்காத 28 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4-0-32-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .