Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்த்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா மழை காரணமாக 26 ஓவர்களாக சுருங்கிய இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. லோகேஷ் ராகுல் 38 (31), அக்ஸர் பட்டேல் 31 (38), நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 19 (11) ஓட்டங்களைப் பெற்றனர். ஜொஷ் ஹேசில்வூட், மத்தியூ கூனுமென், மிற்செல் ஓவன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மிற்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 26 ஓவர்களில் 131 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. அணித்தலைவர் மிற்செல் மாஷ் ஆட்டமிழக்காமல் 46 (52), ஜொஷ் பிலிப் 37 (29), மற் றென்ஷோ ஆட்டமிழக்காமல் 21 (24) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக மாஷ் தெரிவானார்.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026