Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் 21ஆவது தொடர், ரஷ்யாவில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் மோதும் குழு ஏ போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய 211 அணிகளிலிருந்து 31 அணிகளும் போட்டியை நடாத்தும் நாடாகிய ரஷ்யாவுமாக 32 அணிகள் உலகக் கிண்ணத்துக்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.
32 அணிகளும் தலா நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலுமுள்ள ஒவ்வொரு அணியும் குழுவிலுள்ள ஏனைய மூன்று அணிகளுடனும் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடி, அதனடிப்படையில் குழுநிலையில் முதலிரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறும். அதிலிருந்து விலகல் முறையில் இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி இடம்பெற்று சம்பியனாகும் அணி தெரிவாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சம்பியனாக முடிசூடி நடப்புச் சம்பியன்களாகவுள்ள ஜேர்மனி பலமான அணியாகவே இம்முறையும் உள்ளபோதும் கிண்ணத்தைத் தக்க வைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதொன்றாகவே காணப்படுகிறது.
கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஒவ்வொரு முறை நடைபெறும்போதும் கிண்ணத்தைக் கைப்பற்றும் நாடாக இந்தியா ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கப்படுபவது போல இம்முறை கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்திலும் கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட அணியாக பிரேஸிலே கருதப்படுகிறது.
குறித்த கூற்றுக்காம மாத்திரமில்லாமல், சிறந்த கட்டமைக்கப்பட்ட அணியாகவும் உலகக் கிண்ணத்தை அதிக தடவைகளாக ஐந்து தடவைகள் வென்ற பிரேஸில் காட்சியளிப்பதுடன், ஸ்பெய்ன், பிரான்ஸ் போன்ற முன்னாள் சம்பியன்களும் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இதேவேளை, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல், லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா, சிறந்த வீரர்களைக் கொண்ட பெல்ஜியமும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளைக் கொண அணிகளாகக் காணப்படுகின்றன.
இன்று ஆரம்பிக்கும் உலகக் கிண்ணத் தொடரானது, 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறுகின்ற 64 போட்டிகளைத் தொடர்ந்து இன்று ஆரம்பிக்கின்ற ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள லுஸ்கினி அரங்கத்தில் அடுத்த மாதம் 15ஆம் திகதி முடிவுக்கு வருகிறது.
இந்த உலகக் கிண்ணமானது, லியனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அன்ட்ரேஸ் இனியஸ்டா, சேர்ஜியோ றாமோஸ், ஜெராட் பிகே, தோமஸ் முல்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, இந்த உலகக் கிண்ணத் தொடரே, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு பயன்படுத்தப்படும் முதலாவது உலகக் கிண்ணத் தொடராக அமையவுள்ள நிலையில், மிகவும் நெருக்கமான ஓவ் சைட்களை துணை மத்தியஸ்தர்கள் கொடியை உயர்த்து சைகை செய்யாதிருக்க சரியான முடிவை காணொளி உதவி மத்தியஸ்தரே எடுக்கவுள்ளார் என மத்தியஸ்தர்கள் சபையின் தலைவர் பியர்லூகி கொலினா தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago