Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வந்த கரீபியன் பிறீமியர் லீக்கில், இரண்டாவது தடவையாக ஜமைக்கா தலாவாஹ்ஸ் சம்பியனாகியது. கயானா அமேஸன் வொரியர்ஸ் அணியைத் தோற்கடித்தே, இரண்டாவது தடவையாகவும் ஜமைக்கா சம்பியனாகியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜமைக்கா அணித்தலைவர் கிறிஸ் கெய்ல், கயானா அணியைத் முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சொஹைல் தன்வீர் 42(37) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இமாட் வஸீம் மூன்று விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 94 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா, 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கிறிஸ் கெய்ல் 54(27), சட்விக் வோல்டன், குமார் சங்கக்காரா ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 25(36), 12(15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் றயாட் எம்ரிட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் நாயகனாக இமாட் வஸீமும், தொடரின் நாயகனாக அன்றே ரஸலும் தெரிவாகினர்.
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago