Shanmugan Murugavel / 2025 ஜூலை 06 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்ற நிலையில், கிரெனடாவில் வியாழக்கிழமை (03) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அல்ஸாரி ஜோசப் (4), அன்டர்சன் பிலிப், ஜேடன் சியல்ஸ் (2), ஷாமர் ஜோசப், ஜஸ்டின் கிரேவ்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் காரி 63, பியூ வெப்ஸ்டர் 60, ட்ரெவிஸ் ஹெட் 29, கமரன் கிறீன் 26, சாம் கொன்ஸ்டாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஜொஷ் ஹேசில்வூட் (2), அணித்தலைவர் பற் கமின்ஸ் (2), வெப்ஸ்டர், நேதன் லையன் (3), மிற்செல் ஸ்டார்க், ட்ரெவிஸ் ஹெட்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரண்டன் கிங் 75, ஜோன் கம்பெல் 40, ஷாமர் ஜோசப் 29, அல்ஸாரி ஜோசப் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா, மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் காரி 26 ஓட்டங்களுடனும், கமின்ஸ் நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக ஸ்டீவன் ஸ்மித் 71, கமரன் கிறீன் 52, ட்ரெவிஸ் ஹெட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஜேடன் சியல்ஸ் 2, அல்ஸாரி ஜோசப் 1, ஷாமர் ஜோசப் 2, கிரேவ்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
30 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
49 minute ago
2 hours ago