2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 05 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், புலவாயோவில் வியாழக்கிழமை (02) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நியூமன் நையம்ஹுரி (3), சிகண்டர் ராசா (3), றிச்சர் நகரவா, பிளஸிங்க் முஸர்பனியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 157 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, அணித்தலைவர் கிறேய்க் எர்வினின் 75, ராசாவின் 61, ஷோன் வில்லியம்ஸின் 49 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ரஷீட் கான் 4, யமின் அஹ்மட்ஸாய் 3, பரீட் அஹ்மட் 2, ஸியா-உர்-ரஹ்மான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் ரஹ்மத் ஷாவின் 139, இஸ்மத் அலாமின் ஆட்டமிழக்காத 64 ஓட்டங்களோடு மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், முஸர்பனி 4, நகரவா 2, ராசா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .