2025 மே 17, சனிக்கிழமை

இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே இந்தியா வென்றுள்ள நிலையில் தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

அந்தவகையில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என மூன்று பக்கமும் பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பித்தாலே இந்தியாவுக்கு சவாலளிக்க முடியும். குறிப்பாக அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், உப அணித்தலைவர் ஜெர்மைன் பிளக்வூட், கேமார் றோச் ஆகியோர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. அணியில் றேமன் றீஃபயருக்குப் பதிலாக கெவின் சின்கிளேயர் இடம்பெற்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மாற்றமெதுவும் இருக்காது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .