2024 மே 02, வியாழக்கிழமை

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 06 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு இந்தியா, பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ள நிலையில், தொடரிலிருந்து தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டுள்ளது.

நெதர்லாந்திடம் அடிலெய்ட்டில் நேற்று நடைபெற்ற குழு இரண்டு சுப்பர் – 12 போட்டியில் தென்னாபிரிக்கா தோற்றதுடன், பங்களாதேஷை பாகிஸ்தான் வென்ற நிலையிலேயே தென்னாபிரிக்கா தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா எதிர் நெதர்லாந்து

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

நெதர்லாந்து: 158/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொலின் அக்கர்மன் ஆ.இ 41 (26), ஸ்டீஃபன் மைபேர்ஃக் 37 (30), டொம் கூப்பர் 35 (19), மக்ஸ் ஓ டோட் 29 (31), ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆ.இ 12 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 2/27 [4], அன்றிச் நொர்கியா 1/10 [4], ஏய்டன் மார்க்ரம் 1/16 [2], வெய்ன் பார்னல் 0/32 [4])

தென்னாபிரிக்கா: 145/8 (பந்துவீச்சு: பிரண்டன் குளோவர் 3/9 [2], பிரட் கிளாசன் 2/20 [4], பஸ் டீ லீட் 2/25 [3], கொலின் அக்கர்மன் 0/16 [3], லோகன் வான் டீ பீக் 0/23 [3])

போட்டியின் நாயகன்: கொலின் அக்கர்மன்

பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

ஸ்கோர் விவரம்:

நானணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 127/8 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 54 (48), அஃபிஃப் ஹொஸைன் ஆ.இ 24 (20), செளமியா சர்க்கார் 20 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/22 [4], ஷடாப் கான் 2/30 [4], இஃப்திஹார் அஹ்மட் 1/15 [3], ஹரிஸ் றாஃப் 1/21 [4], நசீம் ஷா 0/15 [3])

பாகிஸ்தான்: 128/5 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 32 (32), மொஹமட் ஹரிஸ் 31 (18), பாபர் அஸாம் 25 (33), ஷண் மசூட் ஆ.இ 24 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசும் அஹ்மட் 1/14 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/21 [4], எபொடொட் ஹொஸைன் 1/25 [3.1])

போட்டியின் நாயகன்: ஷகீன் ஷா அஃப்ரிடி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .