2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இருபதுக்கு – 20 உலகக் கின்ணம்: குழுநிலையில் இலங்கை, பங்களாதேஷ்

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளில், தகுதிகாண் போட்டிகளிலிருந்து தகுதிபெறும் ஆறு அணிகளுடன் முன்னாள் சம்பியனான இலங்கையும் பங்களாதேஷும் போட்டியிடவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் நேற்றைய தரவரிசையின்படியே குறித்த உலகக் கிண்ணத்துக்கு அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், இவ்வுலகக் கிண்ணத்தை நடத்தும் நாடான அவுஸ்திரேலியாவும் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களில் இருக்கும் அணிகளான பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகியன இவ்வுலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன.

இதில், தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியன நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெறுகையில், இலங்கையும் பங்களாதேஷும் தகுதிகாண் போட்டிகளிலிருந்து தகுதிபெறும் ஆறு அணிகளுடன் குழுநிலைப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். குழுநிலைப் போட்டிகளிலிருந்து நான்கு அணிகள் சுப்பர் 12 சுற்றுக்குத் தெரிவாகும்.

இந்நிலையில், சுப்பர் 12 சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறாததால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையணியின் மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தற்போதைய தலைவர் லசித் மலிங்க, ஆனால் தொடரில் தாங்கள் சிறப்பாக செயற்படுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணமானது அடுத்தாண்டு ஒக்டோபர் 18ஆம் திகதியிலிருந்து நவம்பர் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .