2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியில் நியூசி தலைவர் இல்லை?

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

31ஆம் திகதி இடம்பெறவுள்ள றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியின் தலைவர் றிச்சி மக்காவ், பங்குபற்ற முடியாத நிலை ஏற்படலாமென சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரையிறுதிப் போட்டியில் இடம்பெற்ற நிகழ்வுக்காக, அவருக்குப் போட்டித் தடை விதிக்கப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுவதன் காரணமாகவே, இந்நிலை ஏற்படலாமென, சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்போட்டியில், தென்னாபிரிக்காவின் பிராங்கொஸ் லவ் மீது, முழங்கையால் வேண்டுமென்றே இடித்தார் என்பது நிரூபிக்கப்பட்டாலே, றிச்சி மீது தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

றக்பி விதிகளின்படி, ஆபத்தான விளையாட்டு மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்கும் 10.4ஏ விதியின் கீழ், முழங்கையால் இடிப்பதென்பது, இரண்டு வாரத் தடையை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

போட்டி முடிவடைந்து 36 மணித்தியாலங்களுக்குள் முறைப்பாடு பதியப்பட வேண்டுமென்ற நிலையில், இன்று காலை 6 மணிவரை, இது தொடர்பான அதிகாரிகளுக்கு நேரமிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .