Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரின் நடப்புச் சம்பியன்களான நியூகாசில் யுனைட்டெட்டை வென்றே இறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றிருந்தது.
நியூகாசிலின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த சிற்றி, தமது மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 5-1 என்ற மொத்த கோல் கணக்கிலே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
சிற்றி சார்பாக ஓமர் மர்மெளஷ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் ஒரு கோலைப் பெற்ற நிலையில், நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தனி எலங்கா பெற்றிருந்தார்.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026