2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான பிரட்டின் பிறீ கிக்கிலிருந்து அவரின் சக மத்தியகளவீரரான நெமஞ்சா மட்டிச் கோலைப் பெற்றபோதும் 3-2 என்ற மொத்த கோலெண்ணிக்கை அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

நெமஞ்சா மட்டிச் கோலைப் பெற்ற ஆறாவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங் கோலைப் பெற்றிருந்தபோதும் அவர் ஓஃப் சைட்டில் காணப்பட்டிருந்தார். இதுதவிர, இரண்டாவது பாதியின் 13ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியாவைத் தாண்டியிருந்தபோதும், ரஹீம் ஸ்டேர்லிங்கின் உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இதேவேளை, போட்டி முடிவடைய ஆறு நிமிடங்களிருக்கையில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் சேர்ஜியோ அகுரோ கோலைப் பெற்றிருந்தபோதும், அவரும் ஓஃப் சைட்டில் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 88ஆவது நிமிடத்தில் பிரட் செலுத்திய பிறீ கிக்கானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .