Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களைப் பெற்று பலமான அடித்தளம் ஒன்றை அமைத்துள்ளது.
தற்போது களத்தில், ஷோர்ன் மார்ஷ் 64 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக டேவிட் வோணர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை தனஞ்சய டி சில்வா வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்த நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஒரு கட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்த நிலையில், ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வாவும் உப அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் 211 ஓட்டங்களை பகிர்ந்தே அணியைப் பலப்படுத்தியிருந்தனர். தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 129 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, மிற்செல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளையும் நேதன் லையன் மூன்று விக்கெட்டுகளையும் ஜோன் ஹொலாண்ட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இலங்கையில் இடம்பெறும் டெஸ்ட் தொடரொன்றில் மூன்று ஐந்து விக்கெட் பெறுதிகளை பெற்ற முதலாவது வேகப்பந்துவீச்சாளராக மிற்செல் ஸ்டார்க் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago