Shanmugan Murugavel / 2016 ஜூலை 22 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) பல்லேகலவில் ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியுடன், அவுஸ்திரேலிய அணியுடனான, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், முதலாவது போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்காத, வேகப்பந்துவீச்சாளர்கள் விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, சுழற்பந்துவீச்சாளரான லக்ஷன் சந்தகன், துடுப்பாட்ட வீரர்களான ரொஷேன் சில்வா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சகலதுறைவீரர்களான மிலிந்த சிரிவர்தன, தசுன் ஷானக ஆகியோரும் துடுப்பாட்டவீரரான லஹிரு திரிமான்னவும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்- அஞ்செலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன, கௌஷால் சில்வா, குஷால் பெரேரா, குஷால் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, நுவான் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகன், சுரங்க லக்மால்
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago