2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, அவுஸ்திரேலிய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி கேட்டுக் கொண்டமைக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமாமல் ஆட்டமிழக்காமல் 80 (118), குசல் மென்டிஸ் 67 (95) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் ஃபோக்னர் 4, மிற்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

228 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.  துடுப்பாட்டத்தில் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 58 (92), ஆரொன் ஃபின்ச் 56 (46), ஜோர்ஜ் பெய்லி 39 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3, லக்ஷன் சந்தகன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஜேம்ஸ் ஃபோக்னர் தெரிவானார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .